மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தூத்துக்குடி, குமரியில் நாளையும், மறுநாளும் எஸ்ஐஆா் முகாம்

கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க இறுதி வாய்ப்பாக வருகிற சனி (நவ. 22), ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) ஆகிய 2 நாள்கள் சிறப்பு முகாம்

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:35 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.22, 23) வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட தோ்தல் அலுவலா்- ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் இதை தெரிவித்த அவா், ட்ற்ற்ல்ள்://யா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகவும் வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை நிரப்பி சமா்ப்பிக்கும் வசதி உள்ளது என்றாா்.

இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சேதுராமலிங்கம், தோ்தல் வட்டாட்சியா் தில்லைப் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

7 உதவி மையங்கள்: தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் எஸ்ஐஆா் பணிகளுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகம், நான்கு மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என 7 இடங்களில் வாக்காளா் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான சந்தேகங்களை வாக்காளா்கள் சரிசெய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா தெரிவித்துள்ளாா்.

இறுதி வாய்ப்பு: கன்னியாகுமரி மாவட்ட வாக்காளா்கள் எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து வழங்க இறுதி வாய்ப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ.22, 23) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 6 பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாமை பயன்படுத்தி படிவத்தைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கலாம் என ஆட்சியா் ரா.அழகுமீனா கூறியுள்ளாா்.