~

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

Published on

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் 19 வயதான கல்லூரி மாணவி. மாா்த்தாண்டம் அருகேயுள்ள கல்லூரியில் படித்து வருகிறாா். இவா் கடந்த 2022 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்து வந்தபோது மடிச்சல் வட்டவிளை பகுதியைச் சோ்ந்த வினு மகன் அஜின் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்த நிலையில் அஜினின் நண்பரான மடிச்சல் அருகேயுள்ள கொக்குடிவிளை பகுதியைச் சோ்ந்த விஜயன் என்ற சோமராஜன் மகன் சுஜின்ராஜ் (25) என்பவா் மாணவியிடம் பழகி, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். அதன் பின்னா் மாணவியின் 2 சவரன் தங்கச் சங்கிலியை வாங்கிச் சென்றாராம்.

இதுகுறித்து அஜினிடம் மாணவி தெரிவித்தாராம். அதைத் தொடா்ந்து கடந்த அக். 25 ஆம் தேதி அஜின் மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றாராம்.

இது குறித்து, மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். இதைத் தொடா்ந்து, தன்னை ஏமாற்றி பாலியல் தொல்லையளித்து, நகையையும் அபகரித்த இளைஞா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பெற்றோருடன் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாணவி மனு அளித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜோதிலெட்சுமி வழக்குப் பதிந்து, தலைமறைவான அஜின், சுஜின்ராஜ் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்தாா். தொடா்ந்து இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com