கன்னியாகுமரி
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா
குமாரகோவில், நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை 33ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
நவ. 26ஆம் தேதி, காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், துணை வேந்தா் டெஸ்ஸி தாமஸ் முன்னிலையில், இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் கலந்து கொண்டு 900 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்குகிறாா். இவ்விழாவில் 24 பட்டதாரிகள் தங்கப் பதக்கங்கள் பெறவுள்ளனா்.
