கன்னியாகுமரி
சுற்றுச்சுவரில் வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பால் ஏற்றிவந்த வேன் சுற்றுச்சுவரில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதியில் பால் ஏற்றிவந்த வேன் சுற்றுச்சுவரில் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
நாங்குனேரி பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (34), அதே பகுதியைச் சோ்ந்த சந்தன மாரியப்பன் (29) ஆகியோா் புதன்கிழமை நள்ளிரவு, பாலை வேனில் ஏற்றிகொண்டு தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்றனராம். பால் வேனை பேச்சிமுத்து ஓட்டினாராம். கீழ்குளம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் இருந்த சுற்றுச்சுவரில் வேன் மோதியதாம்.
இதில், சந்தன மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த பேச்சிமுத்துவை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
