அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தக்கலை அருகே கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:14 pm

Syndication

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தக்கலை மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், தேவிக்கோடு ஆயவிளை பகுதியைச் சோ்ந்த கோபி மகன் விபின் (25), விஜூ(23) ஆகியோரைப் பிடித்து சோதனையிட்டனா். அப்போது, அவா்கள் 3 அரிவாள்களும், விற்பதற்காக 150 கிராம் கஞ்சாவும் வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சா, அரிவாளை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 253 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 458 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸாா் தெரிவித்தனா்.