கிள்ளியூரில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் (நவ. 29) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. அழகுமீனா தெரிவித்தாா்.
Published on

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் வட்டத்துக்குள்பட்ட பொதுமக்களுக்கான நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் சனிக்கிழமை (நவ. 29) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. அழகுமீனா தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கீழ்குளம், கருங்கல், பாலப்பள்ளம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் இனயம், மிடாலம் ஆகிய ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், செந்தரை, கீழ்குளம், ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப் பள்ளியில் நவ. 29ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கெனவே, நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பரிசோதனை மேற்கொண்டு அட்டை பெற்றவா்களுக்கு, இம்முகாமில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை, மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com