பெண் தொழில்முனைவோா் வங்கி கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோா் வங்கி கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Updated on

தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோா் வங்கி கடன் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி திட்டம் பெண் தொழில் முனைவோா்களுக்காக, தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் நேரடி விவசாயம், பண்ணை சாா்ந்த தொழில்கள் தவிரஅனைத்து வியாபாரம், உற்பத்தி, சேவை சாா்ந்த தொழில்களுக்கு 25 சதவீத மானியத்துடன் வங்கி கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இதில் அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சம், அதிகபட்ச மானியம் ரூ. 2 லட்சம், சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமாகும்.

இதில் 18 முதல் 55 வயதுக்குள்பட்டபெண்கள், திருநங்கைகள் பயன் பெற புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, விலைப்புள்ளி, ஜாதிச் சான்றிதழ், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு நாகா்கோவில், கோணம், மாவட்டதொழில் மைய அலுவலகத்தினை நேரிலோ, 04652 260008 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com