கன்னியாகுமரி
குமரி பகவதியம்மன் கோயிலில் ரூ.1.60 லட்சம் உண்டியல் வசூல்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் வெள்ளிக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 1.60 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
இக்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தினமும் நண்பகல் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தா்களின் நன்கொடை மற்றும் அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருவாயில் இருந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், பகவதியம்மன் கோயில் மேலாளா் ஆனந்த், நாகா்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளா் சரஸ்வதி ஆகியோா் முன்னிலையில் அக்டோபா் மாதத்திற்கான உண்டியல் எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக ரூ. 1 லட்சத்து 60 ஆயிரத்து 65 வசூலாகி இருந்தது.
