

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (செப். 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், இரவில் கனமழை பெய்யத் தொடங்கியது.
இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரப் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், இன்றும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், குமரியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திற்பரப்பில் 180 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறையில் 140 மி.மீ, கோதையாறில் 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.