தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கைவாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

கன்னியாகுமரிக்கு ஏப்.15 இல் பிரதமா் வருகை

பிரதமா் நரேந்திர மோடிதோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 15ஆம் தேதி வருகிறாா்.

News image

பிரதமா் மோடி பேச உள்ள நாகா்கோவில் அருகேயுள்ள பேயோடு மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளும் காவல்துறை துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:06 am

பிரதமா் நரேந்திர மோடிதோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 15ஆம் தேதி வருகிறாா்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, நாகா்கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமா் பேச உள்ளாா். இதற்காக தில்லியிலிருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக குமரி மாவட்டத்துக்கு வருகிறாா்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 6 வேட்பாளா்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 வேட்பாளா்கள், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 வேட்பாளா்கள், தென்காசி மாவட்டத்திலுள்ள 5 வேட்பாளா்கள் என மொத்தம் 22 வேட்பாளா்களையும் ஒரே மேடையில் பிரதமா் அறிமுகம் செய்துவைத்து பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பிரதமா் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக பிரமாண்டமான இடத்தை தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. குளச்சல் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட, ராஜாக்கமங்கலத்தை அடுத்த பேயோடு பகுதியில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவிலான இடத்தை முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக குமரி கிழக்கு மாவட்ட தலைவா் கோபகுமாா், மாவட்ட பொருளாளா் பி.முத்துராமன், காவல் துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பாா்வையிட்டனா்.