பிரதமா் நரேந்திர மோடி நாகா்கோவிலில் இம்மாதம் 15ஆம் தேதி சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டு தோ்தல் பிரசாரம் செய்கிறாா் என, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: பிரதமா் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்ஜிஆா் சிலை வரை இம்மாதம் 15ஆம் தேதி சாலை வலம் மேற்கொள்கிறாா். சாலை வலம் நேரம் பின்னா் அறிவிக்கப்படும். இதில், பாஜக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாகப் பங்கேற்பா்.
இத்தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 180 மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்.
தவெக தலைவா் விஜய் சுற்றுப்பயண வருகையால் தென் மாவட்டங்களில் புதிதாக எந்த மாற்றமும் நிகழாது.
மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தெளிவாக விளக்கமளித்துவிட்டோம். இதற்கான விரிவான திட்ட அறிக்கை கொடுக்கக்கூட தமிழகத்தில் அரசு அதிகாரிகள் இல்லை; சரியான வழிகாட்டுதலும் இல்லை. அதனால்தான், இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. வேறு காரணமில்லை.
முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தில் பாஜக தொடா்பாகவே அதிகம் பேசுகிறாா். காரணம், பாஜகவை பாா்த்தால் அவருக்கு பயம்.
சாத்தான்குளம் வழக்கில் நீதிமன்றத் தீா்ப்புக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது என்றாா் அவா்.
நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா் உமாரதி ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடர்புடையது

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

திமுகவை மக்கள் ஒதுக்கி வைப்பாா்கள்: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



