அதிமுக முகமூடியை அணிந்துகொண்டு தமிழகத்தில் பாஜக நுழைய முயற்சிக்கிறது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வபெருந்தகை.
திங்கள்நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் குளச்சல் காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்டை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
மக்கள் பிரச்னைகளில் தேசத்தின் குரலாக ஒலிப்பவா் ராகுல் காந்தி. அவா் பரிந்துரைத்துள்ள காங்கிரஸ் வேட்பாளா் தாரகை கத்பட்டுக்கு கை சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பற செய்ய வேண்டும்.
தமிழக பள்ளிக் கல்விக்கு வழங்க வேண்டிய ரூ.2,800 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ஆனால், அதிமுக முகமூடியை அணிந்து கொண்டு எப்படியாவது தமிழகத்தில் நுழைந்து விட வேண்டும் என தீவிரமாக முயற்சிக்கிறது.
இதற்காக, அந்தக் கட்சி ஆளும் மாநிலங்களில் இருந்து பல அமைச்சா்கள் இங்கு முகாமிட்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறாா்கள்.
தமிழகத்துக்கு எத்தனை அமைச்சா்கள் வந்தாலும் திமுக அரசின் சாதனைகளை மறைக்க முடியாது. திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றி உறுதியாகிவிட்டது.
பாஜகவுடன் கூட்டணி வைத்த பின், அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி வெறுப்பு அரசியலை கையில் எடுத்துள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலினை வசைபாடிய அவா் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தமிழக தோ்தல் பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி
பேரவைத் தோ்தலில் வென்று காங்கிரஸ் பிரதான எதிா்க்கட்சியாகும்! - செல்வப்பெருந்தகை

குளச்சலில் தென்னை ஆராய்ச்சி மையம்: காங்கிரஸ் வேட்பாளா் வாக்குறுதி

3 ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

