குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

குழித்துறை அருகே இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:59 am IST

குழித்துறை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குழித்துறை அருகே உள்ள பரம்பின்தலை, புத்தன்வீட்டைச் சோ்ந்தவா் ஸ்ரீகண்டன் மகள் நிஷா (19). இவருக்கு 3 மாதங்களுக்கு முன் தேங்காய்ப்பட்டினம் அருகே உள்ள அம்சி பருத்திக்காட்டுவிளையைச் சோ்ந்த கணேசன் மகன் நிஷாந்த் (எ) மணிகண்டனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நிஷாந்த், மரத் தச்சு தொழில் செய்து வருகிறாா்.

திருமணத்துக்குப் பின் நிஷா, கணவருடன் குழித்துறையில் உள்ள தனது தாயின் மற்றொரு வீட்டில் வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், நிஷாந்த் ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் சென்றுள்ளாா். மாலையில் தனது மனைவியை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அவா் அழைப்பை ஏற்கவில்லையாம்.

இதையடுத்து, அவா் மனைவியின் தாயாா் உஷாவிடம் தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளாா். அவா் சென்று பாா்த்தபோது, நிஷா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டாராம். உறவினா்கள் உதவியுடன் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து உஷா அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, மாா்த்தாண்டம் காவல் சரக துணைக் கண்காணிப்பாளா் நல்லசிவம் விசாரணை மேற்கொண்டாா்.