தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் பூம்புகாா் படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதையொட்டி, தனியாா், அரசு ஊழியா்கள் வாக்களிப்பதற்காக வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னியாகுமரி பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கான படகு சேவை வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இங்கு கோடை சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். தோ்தலையொட்டி படகு சேவை ரத்து செய்யப்பட்டதால் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
தொடர்புடையது
ஆய்வுக்குட்படுத்தப்படாத மீன்பிடிப் படகுகளின் பதிவு ரத்து: ஆட்சியா் எச்சரிக்கை

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை ரத்து

குமரியில் சூறைக்காற்று: படகு சேவை 5 மணி நேரம் ரத்து

கொடைக்கானலில் படகுகள் அழகுபடுத்தும் பணி தொடக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



