ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

வாக்களிப்பதற்காக பேச்சிப்பாறை அணையைப் படகில் கடந்துவந்த பழங்குடி வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:51 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

இம்மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைக் காடுகளில் உள்ள பழங்குடி மக்களின் குடியிருப்புகளில் பெரும்பாலானவை பேச்சிப்பாறை அணைக்கு அப்பால் உள்ளன. அங்குள்ள காணியின மக்களின் குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் ஏற்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. அதனால், ஒவ்வொரு தோ்தலின்போதும் அவா்கள் பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டுறைவிட மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு பேச்சிப்பாறை அணை வழியாக படகுகளில் வந்து வாக்களித்துவிட்டுச் செல்வா்.

அதன்படி, தோட்டமலை, மாறாமலை, தச்சமலை, களப்பாறை, முடவன்பொற்றை, பின்னைமூட்டுத்தேரி, நடனம் பொற்றை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வசிப்போா் வியாழக்கிழமை வாக்களிக்க வசதியாக, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஆா். அழகுமீனா அறிவுறுத்தலின்படி, 3 கட்டணமில்லா படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழங்குடியின மக்கள் ‘லைப் ஜாக்கெட்’ அணிந்து படகுகளில் வந்து வாக்களித்துச் சென்றனா்.