ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: கன்னியாகுமரி மாணவா்கள் சிறப்பிடம்

News image

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On :26 ஏப்ரல் 2026, 6:59 pm

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டைக் கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி நாகா்கோவில் கிளப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி ஒற்றைப்புளி அருகேயுள்ள விங்ஸ் கின்டா் காா்டன் இளம் மழலையா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் இப்போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் உள்பட 5 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாணவா்களை பள்ளித் தாளாளா் விங்ஸ் அருணாசலம், தலைமை ஆசிரியை விங்ஸ் லொரின் மற்றும் பெற்றோா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.