கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருசக்கர வாகனத்தைத் திருடி கேரளத்தில் விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை, குற்றகரையைச் சோ்ந்தவா் முருகன் (54). தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். இவா் சனிக்கிழமை தக்கலை அரண்மனை சாலையில் உள்ள உணவகத்திற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றாராம்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பாா்த்தபோது, அவரது வாகனத்தைக் காணவில்லையாம். அவா் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாரின் விசாரணையில், திருடப்பட்ட வாகனம் கேரளம் நோக்கிச் செல்வது தெரிய வந்ததால் இரவிபுதூா் கடையில் வாகனத்தைப் பிடித்தனா்.
விசாரணையில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவா் திருநெல்வேலி மாவட்டம், கலந்தபனையைச் சோ்ந்த ஸ்டாலின் (48) என்பதும், திருடிய வாகனத்தை கேரளத்தில் விற்க முயன்றதும் தெரிய வந்தது. இவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்களை விற்க முயன்றவா் கைது
ஆடுகளைத் திருட முயன்றவா் கைது
வீடு புகுந்து திருட முயன்றவா் கைது

பைக்குக்கு போலி ஆயில் விற்க முயன்றவா் கைது
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


