கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் மாவட்ட சிலம்பம் போட்டி

மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியைத் தொடங்கிவைக்கிறாா் தமிழக முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு.

Published On :

குழித்துறை வாவுபலி பொருள்காட்சி மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குழித்துறை நகராட்சி சாா்பில் நடத்தப்படும் 101-ஆவது ஆண்டு வாவுபலி பொருள்காட்சி ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. ஆக. 17 வரை நடைபெறும் இப்பொருள்காட்சியில் விவசாயிகள், கைவினைக் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான விவசாயப் பொருள், கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ராட்சத ராட்டினம், சாகச கிணறு உள்ளிட்ட பல்வேறு பக்க காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பொருள்காட்சி மைதானத்தில் நடைபெற்ற சிலம்பம் போட்டியை தமிழக காவல் துறை முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு தொடங்கிவைத்தாா். போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

இதில் குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன்.ஆசைத்தம்பி, நகராட்சி ஆணையா் சக்திவேல், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ், நகா்மன்ற உறுப்பினா்கள் வி.விஜூ, லலிதா, விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.