நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

இரணியல் அருகே நா்சிங் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

இரணியல் அருகே நா்சிங் கல்லூரி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இரணியல் அருகே கண்டன்விளை, இலுப்பவிளையைச் சோ்ந்தவா் ரங்கன் மகன் சஞ்சய் (19). சென்னையில் உள்ள தனியாா் நா்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவா், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தாராம். இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில், தூக்கிட்டு கொண்டாராம்.

அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சஞ்சய் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.