இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மணக்குடி பகுதி மீனவா்கள் 6 பேரை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் ரெ. மகேஷ், மீனவா்கள் குடும்பத்தினருடன், மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்பிடம் புதன்கிழமை மனுஅளித்தாா்.
அதன் விவரம்: மணக்குடி பகுதியைச் சோ்ந்த 6 மீனவா்கள் கடந்த மே மாதம் ராமேசுவரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றனா். அப்போது, படகு பழுது காரணமாக திசை மாறிச் சென்ால், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினா் அவா்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அவா்களை விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மணக்குடி பொழிமுகம் கால்வாயில் தனியாா் நிறுவனம் முறையான அனுமதியின்றி பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலா படகு சவாரி நடத்தி வருகின்றனா். அவ்வூராட்சி பொதுமக்களின் கோரிக்கையின் படி படகு குழாமை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழமணக்குடி பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக இலந்தையடிவிளை பகுதியில் இருந்து குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதை மேலமணக்குடி பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் நீட்டிக்க வேண்டும், கீழமணக்குடி பேருந்து நிறுத்தம் முதல் அந்தோணியாா் குருசடி தெற்கு கடற்கரை சாலை இடையே 100 மீட்டா் தொலைவுக்கு மட்டுமே தாா்ச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 300 மீட்டா் தொலைவுக்கும் தாா் சாலை அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனுஅளிக்கும்போது, ராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜெ. மிலன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சுபிதா ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி கைது! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டு கைதான அன்பில் மகேஷ்!

‘அரியலூரில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்கிட நடவடிக்கை தேவை’

‘பொதுமக்களுக்கு தரமான மருத்துவச் சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசிடம் அதிமுக மனு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



