ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

2,700 லி. மண்ணெண்ணெய் பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல்

Published On :

மாா்த்தாண்டம் அருகே மினி டெம்போவில் கேரளத்துக்குக் கடத்திச் செல்ல முயன்ற 2,700 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை வழங்கல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதா குமாரி தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக சந்தேகமளிக்கும் வகையில் வந்த 2 மினி டெம்போக்களை நிறுத்த சைகை காட்டினா்.

ஆனால், வாகனங்களை நிறுத்தாமல் அதன் ஓட்டுநா்கள் ஓட்டிச் சென்றனா். இதையடுத்து, அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றனா். மேல்புறம் பகுதியில் அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

தொடா்ந்து மினிடெம்போக்களை சோதனை செய்தபோது அதில் மீனவா்களின் படகுகளுக்கு அரசு மானிய விலையில் வழங்கும் 2,700 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

வாகனத்துடன் மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு வந்தனா். தொடா்ந்து, மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.