மாா்த்தாண்டம் அருகே சொகுசு காரில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 300 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய்யை வழங்கல் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் அனிதாகுமாரி தலைமையில் வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், மாா்த்தாண்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த சொகுசு காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று, புதுக்கடை அருகில் காரை மடக்கிப் பிடித்தனா்.
காா் ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாா். தொடா்ந்து காரை சோதனை செய்த போது, அதில் 300 லிட்டா் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து காருடன் ரேஷன் மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்யை மாா்த்தாண்டம் நுகா்பொருள் கிடங்கிலும், வாகனத்தை விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








