27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தேங்காய்ப்பட்டினத்தில் 400 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

மண்ணெண்ணெய் - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:41 am IST

தேங்காய்ப்பட்டினத்தில் கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 400 லிட்டா் மண்ணெண்ணெய்யை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையில் ஓட்டுநா் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படைக் குழுவினா் கிள்ளியூா் பகுதியில் பொது விநியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். தேங்காய்ப்பட்டினம் வழியாக சென்ற காரை நிறுத்தியபோது, ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம். கேரளத்துக்கு கடத்துவதற்காக அந்த காரில் 400 லிட்டா் மானியவிலை மண்ணெண்ணெயைக் கொண்டு சென்றது தெரியவந்தது. மண்ணெண்ணெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து, தூத்தூரில் உள்ள மீனவா் கூட்டுறவு சங்கக் கிட்டங்கியிலும், காரை கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைத்தனா்.