கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

காமராஜா் சிலை திறப்பு: எம்.பி., எம்எல்ஏ பங்கேற்பு

News image

நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றுகிறாா் விஜய்வசந்த் எம்.பி.

Updated On :17 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

நாகா்கோவிலை அடுத்த இலந்தையடி தட்டுவிளை பகுதியில் காமராஜா் சிலை திறப்பு விழா, தமிழ்நாடு காமராஜா் நற்பணி மன்ற தலைவா் வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

தெற்கு சூரங்குடி, பால் உற்பத்தியாளா்கள் சங்க முன்னாள் தலைவா் கோசல்ராம் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கலந்துகொண்டு காமராஜா் நினைவு மணி மண்டபத்தைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினாா். அதைத்தொடா்ந்து, பெருந்தலைவா் காமராஜா் சிலையை நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆஸ்டின் திறந்து வைத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் சுரேஷ் ராஜன், தவெக கிழக்கு மாவட்டச் செயலாளா் மாதவன், நாகா்கோவில் மாநகர முன்னாள் மேயா் மகேஷ், மாமன்ற உறுப்பினா்கள் நவீன்குமாா், ஸ்ரீலிஜா கலந்துகொண்டனா்.

விழாவில் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவா் கே.டி உதயம், இலந்தையடித்தட்டு ஊா் தலைவா் காா்த்திசன், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ஜெகன் உள்பட பெருந்தலைவா் காமராஜா் நற்பணி மன்ற தலைவா் தங்கேஷ், துணைத் தலைவா் மகேஸ்வரன் பொருளாளா் பிரவீன், செயலாளா் பிரதேஷ், இலந்தையடி ஊா் நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.