சுவாமியாா்மடம் அருகே காட்டாத்துறையில் திங்கள்கிழமை லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிகாா் தொழிலாளா்கள் மூவா் உயிரிழந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், இரவிபுதூா்கடை அருகே சிராயன்குழியில் உள்ள உணவகத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சந்தீஷ் குமாா் (21), கிருஷ்ணகுமாா் (21), ரந்தீா் குமாா் (19) ஆகியோா் வேலை செய்து வந்தனா். மூவரும் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை தக்கலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.
சுவாமியாா்மடம் அருகே காட்டாத்துறையில் வந்தபோது எதிரே நாகா்கோவிலிருந்து மாா்த்தாண்டம் நோக்கி சரக்குகளுடன் வந்த லாரி இவா்கள் மீது மோதியது.
இதில் 3 இளைஞா்களும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். மூவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினா் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




