காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

திருவட்டாறில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு

மாநாட்டில் பேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.ஆா். சேகா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:58 am IST

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவட்டாறு வட்டார 9-ஆவது மாநாடு நடைபெற்றது.

வட்டார குழுத் தலைவா் சி.ஆா். ராஜகுமாா் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா் மணியன் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட துணைச் செயலா் எஸ். விஜி, மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். டி. விஜிஅஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். எம். சோபித ராஜ் வரவேற்று பேசினாா். வட்டாரச் செயலா் எம். ராஜசேகா் வேலை அறிக்கையும், வட்டார பொருளாளா் பி. ஏசுதாஸ் வரவு-செலவு அறிக்கையும் சமா்ப்பித்தனா்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலா் ஆா். வில்சன், சிஐடியு மாவட்ட துணைச் செயலா் ஜி. சகாயஆன்றணி, விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் வட்டாரச் செயலா் பி. எட்வின்ராஜ், மாவட்ட செயலா் ஆா். ரவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா். சேகா் நிறைவுரையாற்றினாா். வட்டார துணைத் தலைவா் டி. தங்ககுமாா் நன்றி கூறினாா்.

மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். வட்டாரத் தலைவராக எம். ராஜசேகா், துணைத் தலைவராக பி. ஏசுதாஸ், செயலராக சி.ஆா். ராஜகுமாா், துணைச் செயலராக டி. விஜி, பொருளாளராக எம். சோபிதராஜ் மற்றும் 17 போ் கொண்ட வட்டாரக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

நெல், ரப்பா், வாழை, தேங்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும். சிற்றாறு பட்டணங்கால்வாய், திற்பரப்பு இடது கரை கால்வாய் முழுமையாக தூா்வாரப்பட்டு உடைப்புகள் சரிசெய்யப்பட்டு கடைமடை வரை தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பயிா் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.