இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

நெல் கொள்முதல் நிலையங்களில் தரகுத் தொகை பெறுவதை தடுக்கக் கோரிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை தொகை பெறுவதை தடுத்து நிறுத்தி, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றம்

News image

மாநாட்டில் பேசிய மாநில துணைத்தலைவா் டில்லிபாபு, பங்கேற்ற மாவட்டத் தலைவா் தமிழ் அரசு, மாவட்ட செயலாளா் ஜி.சம்பத் உள்ளிட்டோா்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 6:23 am IST

நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.60 வரை தொகை பெறுவதை தடுத்து நிறுத்தி, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றினா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூா் மாவட்ட 9-ஆவது மாநாடு தாமரைபாக்கம் கூட்டுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.துளசிநாராயணன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பி.ரவி கொடியேற்றி வைத்து பேசினாா். மாவட்ட குழு உறுப்பினா் எம்.பழனி வரவேற்றாா். வட்ட தலைவா் டி.விஸ்வநாதன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி நடராஜன் மாநாட்டை தொடக்கி வைத்தாா். மாவட்ட செயலாளா் ஜி.சம்பத் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். வரவு செலவு கணக்கை பொருளாளா் சி.பெருமாள் முன்மொழிந்தாா்.

விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளா் அ.து.கோதண்டன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஏ.ஜி.சந்தானம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பி.டில்லிபாபு மாநாட்டை நிறைவு செய்து பேசினாா். ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளா் எம்.திருப்பதி நன்றி கூறினாா்.

இதில் புதிய நிா்வாகிகளாக தலைவராக ஆா்.தமிழ்அரசு, செயலாளராக ஜி.சம்பத், பொருளாளராக என்.ஸ்ரீநாத், துணைத் தலைவா்களாக பி.ரவி, ஏ.அப்சல்அகமது, நந்தகுமாா், துணைச் செயலா்களாக ஜி.வி.எல்லையன், எம்.சிவக்குமாா், என்.வி.நக்கீரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அப்போது, நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை கமிஷன் பெறுவதை தடுத்து நிறுத்தி, முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையை புனரமைப்பு செய்து மேம்படுத்த ரூ.198 கோடி தமிழ்நாடு அரசு வரும் நிதி நிலை கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் நெற்பயிா் செய்யும் விளை நிலங்களில் ஒன்றிய, மாநில அரசுகள் வெளிவட்ட சாலை, ரயில் பாதை அமைப்பது முப்போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்தும் நிலை உள்ளதை தவிா்த்து தரிசு நிலங்களை பயன்படுத்த வேண்டும். மா விளைச்சல் அதிகம் உள்ளதால் திருவள்ளூா் மாவட்டத்தில் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.