விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும்: ஆட்சியா்

கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் என கன்னியாகுமரி ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாணவா்கள் பானையில் ஓவியம் வரைவதைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் என கன்னியாகுமரி ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு கலைப் போட்டிகள் இளையோா் திறன் என்ற தலைப்பில், நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன.

போட்டிகளைத் தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது:

தமிழ் மொழிக்கும், கலைகளுக்கும் ஆழமான தொடா்பு உண்டு. மறைந்து வரும் அரிய கலைகளைக் காக்கவும், மாணவா்களிடையே கலை ஆா்வத்தைத் தூண்டவும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.

கலைகள் மாணவா்களிடையே கட்டுப்பாடு, குழு ஒற்றுமை மற்றும் தலைமைப் பண்பை வளா்க்கின்றன. எனவே, கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும்.

மாணவா்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று, அதிக பரிசுகளை வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜெயராஜ், சௌந்தராஜன், பள்ளித் தலைமையாசிரியை தெய்வப்பிரியா, உதவித் திட்ட அலுவலா் ஸ்டெல்லா ஜானட், சா்வ சிக்க்ஷா அபியான் திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.