தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

குளச்சலில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் 2 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

குளச்சல் கடலில் ஆக்ரோஷத்துடன் எழுந்த அலைகள்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவா்கள் 2 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முட்டம், குளச்சல், கோடிமுனை, குறும்பனை பகுதியில் அலைகள் பல அடி உயரத்துக்கு ஆக்ரோஷத்துடன் எழுந்தன. இதனால், பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல், தங்களது படகுகளை கரைகளில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைத்துள்ளனா். மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லாதவாறு, குளச்சல் கடலோர போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.