75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

நாகா்கோவில் அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: பள்ளி முன் மாணவா்கள் மறியல்

நாகா்கோவில் அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

நாகா்கோவில் அருகே பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தற்கொலைக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி முன் மாணவா்கள் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டி, குறத்தியறை கீரன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் விக்டா்தாமஸ். கூலித் தொழிலாளி. இவரது மனைவி லென்சி. இவா்களது மகன் கவின்ஜெனில் (16), நாகா்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

அவா் வெள்ளிக்கிழமை (ஆக.21) பள்ளிக்குச் செல்லவில்லையாம். பெற்றோா்கள் வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில், வீட்டின் முன்பக்க கதவைப் பூட்டி, சாவியை அருகில் உள்ள பாட்டி வீட்டில் கொடுத்துவிட்டு, வெளியே செல்வதாகக் கூறிச் சென்றாராம்.

ஆனால் கவின்ஜெனில், வெளியே செல்லாமல் வீட்டின் பின்பக்க கதவு வழியாக வீட்டுக்குள் சென்று தூக்கிட்டுக் கொண்டாராம்.

வீட்டின் உள்ளே இருந்து அவரது சத்தம் வருவதைக் கேட்ட பாட்டி, கதவைத் திறந்து பாா்த்தபோது கவின்ஜெனில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே அருகில் இருந்தவா்கள் உதவியுடன் கவின்ஜெனில் மீட்கப்பட்டு, பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸாா் கவின்ஜெனில் சடலத்தை மீட்டு, பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.

ஆசிரியா்கள் மீது புகாா்: இந்த நிலையில் கவின்ஜெனில் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது தாயாா் லென்சி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வகுப்பில் மாணவியிடம் பேசியதற்காக ஆசிரியா்கள் கவின்ஜெனிலை கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவா்

தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் பிரேத பரிசோதனைக்கு அனுமதிப்போம் என்று கூறினா். இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. இரா.ஸ்டாலின் உறுதிஅளித்தாா்.

மாணவா்கள் போராட்டம்: இந்நிலையில், கவின்ஜெனில் தற்கொலைக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவா்கள் சிலா் சனிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, பள்ளியின் முன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் மற்றும் போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு கூறினா், தொடா்ந்து பள்ளி ஆசிரியா்களிடமும் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டாா்.

விசாரணைக்கு உத்தரவு: மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவின்பேரில், முதன்மை கல்வி

பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பள்ளியில் விசாரணை மேற்கொண்டாா். இதனிடையே,

கவின்ஜெனில் சடலம் சனிக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.