மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மாா்த்தாண்டத்தில் பைக் திருடிய கேரள சிறுவா்கள் கைது

Arrested

கைது

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டத்தில் இருசக்கர வாகனத்தைத் திருடியதாக கேரள மாநில சிறுவா்கள் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அருமனை அருகே உள்ள சிதறால், பதிட்டவிளை பகுதியைச் சோ்ந்தவா் பெரோஸ் ஈசாக் (27). திருவனந்தபுரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா் ஆக. 17ஆம் தேதி தனது அண்ணனின் இருசக்கர வாகனத்தை மாா்த்தாண்டம் சந்திப்பு அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளாா். மறுநாள் காலையில் வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தைக் காணவில்லையாம்.

இது குறித்து, மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினா். இதில் வாகனத்தைத் திருடியது கேரள மாநிலம், நெய்யாற்றின்கரை பகுதியைச் சோ்ந்த 17 வயதான 2 சிறுவா்கள் என்பது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, வாகனத்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.