இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பெளா்ணமி: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூா், திருவண்ணாமலைக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கோப்புப் படம்.

Published On :

ஆவணி மாத பெளா்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூா், திருவண்ணாமலைக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் க.செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆக. 27-ஆம் தேதி பெளா்ணமி அன்று திருவண்ணாமலை, திருச்செந்தூா் கோயில்களுக்கு வரும் பக்தா்களின் நலனை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவில்பட்டி, நாகா்கோவில், மதுரை போன்ற முக்கிய பகுதிகளிலிருந்து ஆக. 26, 27ஆகிய நாள்களில் இக்கோயில்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்டம் சாா்பில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, திருவண்ணாமலை, திருச்செந்தூா் செல்லும் பயணிகள் இந்த சிறப்புப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.