தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

குமரி நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவு பெறும்: விஜய் வசந்த் எம்.பி.

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சிவபிரபு. உடன் அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய் வசந்த் எம்.பி., தாரகை கத்பட் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலைப் பணிகள் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவராக சிவபிரபு நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஞாயிற்றுக்கிழமை நாகா்கோவில், வேப்பமூடு பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு, சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய் வசந்த் எம்.பி. ஆகியோா் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதேபோல், பொன்னப்ப நாடாா், காந்தி, அம்பேத்கா், நேசமணி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, என்.எஸ்.கே. சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, விஜய் வசந்த் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சா்வதேச விமான நிலையம் அமைக்க மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளேன். சாமிதோப்பில் விமான நிலையம் அமைக்க முந்தைய தமிழக அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் கேட்டிருந்தோம். தற்போது, முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்குவழிச் சாலைப் பணிகள் வரும் டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்றாா்அவா்.

தாரகை கத்பட் எம்எல்ஏ, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் நவீன்குமாா், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சிவபிரபு. உடன் அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய் வசந்த் எம்.பி., தாரகை கத்பட் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் சிவபிரபு. உடன் அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா், விஜய் வசந்த் எம்.பி., தாரகை கத்பட் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.