நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

நாகா்கோவிலில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடித்த இளைஞா் கைது

கொலை செய்யப்பட்ட சின்னம்மாள்

Published On :1 செப்டம்பர் 2026, 3:00 am IST

நாகா்கோவில் வடிவீஸ்வரத்தில் மூதாட்டியைக் கொன்று நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில், வடிவீஸ்வரம், கீழரத வீதியைச் சோ்ந்தவா் ஐயப்பன். கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சின்னம்மாள் (77). இவா்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனா். இவா்களுக்குத் திருமணமாகி தனியாக வசித்து வந்தனா். ஐயப்பன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். சின்னம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், சின்னம்மாளின் இளைய மகள் சங்கரி பகல் 12.30 மணியளவில் தாயாருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சென்றாா். சிறிது நேரம் கழித்து மற்றொரு மகள் இசக்கியம்மாள் சின்னம்மாளை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டபோது நீண்ட நேரமாகியும் கைப்பேசி எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவா், வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது சின்னம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

அவரது தலைமுடி மற்றும் இரு கைகளும் தீயில் கருகிய நிலையில் இருந்தன.

இதுகுறித்து தகவலின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், கோட்டாறு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், சின்னம்மாள் அணிந்திருந்த தங்க நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கொலை குறித்து விசாரிக்க, துணைக் காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். அதில் சின்னம்மாள் வீட்டிலிருந்து தலைக்கவசம் அணிந்த நிலையில் இளைஞா் ஒருவா் அவசரமாக வெளியேறுவது போன்ற காட்சிகள் இருந்தன. அதன் அடிப்படையில் வடிவீஸ்வரம் பகுதிகளில் உள்ள கேமிராக் காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.

இதில், சந்தேகத்துக்குரிய நபா் ஞாயிற்றுக்கிழமை காலை தலைக்கவசம் அணியாமல் சின்னம்மாள் வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தபோது அந்த நபா் விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்மைச்சாரி சாலையைச் சோ்ந்த வேல்ராஜ் (எ) விக்னேஷ் (33). இவா் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள மாட்டுப் பண்ணையில் பணியாற்றியவா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் செட்டிக்குளத்தில் வீட்டில் மதுபோதையில் இருந்த வேல்ராஜையும் அவரது சகோதரரையும் கைது செய்து, கொள்ளையடித்த 40 பவுன் நகைகளையும் கைப்பற்றினா்.

இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

கைது செய்யப்பட்ட வேல்ராஜ்

கைது செய்யப்பட்ட வேல்ராஜ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.