தக்கலை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

தக்கலை அருகே மணலி பகுதியில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்தவரை கைது செய்த தக்கலை போலீஸாா், அவரிடமிருந்து 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
கைது
கைது
Updated on

தக்கலை அருகே மணலி பகுதியில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்தவரை கைது செய்த தக்கலை போலீஸாா், அவரிடமிருந்து 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தக்கலை அருகே மணலி பகுதியில் பதுக்கிவைத்து மது விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, தக்கலை காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த டைட்டஸிடம் (55) விசாரணை மேற்கொண்டனா்.

அவா் கொடுத்த தகவலின் பேரில் பதுக்கி வைத்திருந்த 163 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், மது விற்பனை செய்து வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனா். பின்னா், டைட்டஸை கைது செய்த தக்கலை போலீஸாா் அவரை சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com