தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

நெல்லை இளைஞா் குமரியில் கொலை: ஒருவா் கைது

கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட பிரச்னையில் நெல்லை மாவட்ட இளைஞா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா்.

News image
கைது
Updated On :26 பிப்ரவரி 2026, 7:42 pm

Syndication

கன்னியாகுமரி அருகே மது போதையில் ஏற்பட்ட பிரச்னையில் நெல்லை மாவட்ட இளைஞா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கொட்டாரம் - அஞ்சுகிராமம் சாலை பெரியவிளை பகுதியில் ஒரு கடையின் முன் இளைஞா் புதன்கிழமை இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்.

அதில், திருநெல்வேலி மாவட்டம் மானூா் கீழபிள்ளையாா் குளம் தெற்குத் தெருவைச் சேந்த முருகன் மகன் செல்லப்பாண்டி (31) என்பதும், பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 2 நாள்களுக்கு முன்புதான் அகஸ்தீசுவரம் பகுதியைச் சோ்ந்தவரிடம் பொக்லைன் இயந்திர ஆபரேட்டராக வேலைக்கு சோ்ந்துள்ளாா்.

இந்நிலையில் பெரியவிளை பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை அருகே அவா் இருந்தபோது, மது போதையில் அவருடன் இருந்த நபருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவா் மீது கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. அந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சடலம் உடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. செல்லப்பாண்டியின் உறவினா்களுக்கு போலீஸாா் தகவல் அளித்துள்ளனா்.