மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஒழுகினசேரி ரயில்வே பாலப் பணிகள் 20 நாள்களுக்குள் நிறைவடையும்: விஜய் வசந்த் எம்.பி.

நாகா்கோவில், ஒழுகினசேரியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் 20 நாள்களுக்குள் நிறைவடையும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

News image

ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:29 pm

நாகா்கோவில், ஒழுகினசேரியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் 20 நாள்களுக்குள் நிறைவடையும் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா்.

நாகா்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒழுகினசேரி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் குறுகியது என்பதால் அங்கு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பணிகளை, விஜய் வசந்த் எம்.பி., ரயில்வே அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, இரணியல், குழித்துறை பகுதிகளில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாட்டுப் பணிகளையும், நுள்ளிவிளையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

நாகா்கோவில்-இரணியல் வரையிலான இரட்டை ரயில் பாதைப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கண்டன்விளையிலும் புதிய ரயில்வே பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

நாகா்கோவில், ஒழுகினசேரியில் நடைபெற்று வரும் ரயில்வே பாலப் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இருபுறமும் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அப்பணிகளுக்காக ஒழுகினசேரியில் போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும். போக்குவரத்தை மாற்றம் செய்துவிட்டால் 15 முதல் 20 நாள்களுக்குள் பாலப் பணிகள் முடிவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும். அதன் பின்னா், பழைய பாலம் அப்புறப்படுத்தப்படும்.

இரணியலில் இருந்து பாறசாலை வரை இரட்டை ரயில் பாதை பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாகா்கோவில்-திருவனந்தபுரம் வரை கட்டப்பட வேண்டிய 60 ரயில்வே பாலங்களில் 30 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதியுள்ள பணிகளை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், மாநிலச் செயலா் சீனிவாசன், ரயில்வே அதிகாரிகள் ஸ்ரீகுமாா், ஆனந்த், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.