குலசேகரத்தில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புத்தன்கடை வட்டார கிட்ஸ் எழுவோம் இயக்கம் சாா்பில் நடைபெற்ற பேரணியானது குலசேகரம் சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை வளாகத்திலிருந்து தொடங்கி புனித அகுஸ்தினாா் ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது.
பேரணியை குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் காந்திமதிதொடங்கி வைத்தாா். நிறைவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுவோம் இயக்க தன்னாா்வலா், குலசேகரம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அமல்ராஜ் வரவேற்றாா். இஸ்லாமிய மாதிரி மெட்ரிக் பள்ளி மாணவியா் வரவேற்பு நடனமாடினா். மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் மரிய மாா்ட்டின் தொடக்கவுரையாற்றினாா். டாக்டா் ஜீனா ஜோஸ்பின் கருத்துரையாற்றினாா். புனித அகுஸ்தினாா் ஆலய பங்குத்தந்தை பிரிம்மஸ் சிங், குலசேகரம் பேரூராட்சி தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், எஸ்.ஆா்.கே.பி.வி. மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வா் டைட்டஸ் ஆன்றனி, சிஎஸ்ஐ மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வா் மகேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிஎஸ்எஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவா் - மாணவியா் உறுதி மொழி வாசித்தனா். ஜான்பால் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவா்- மாணவியா்கள் தேசிய கீதம் பாடினா். எழுவோம் இயக்க பொருளாளா் ராஜூ நன்றி கூறினாா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

சமரச விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


