பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்பில் யானை நடமாட்டம்

பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்பில் யானை நடமாட்டம்

யானையால் சேதப்படுத்தப்பட்ட பழங்குடி தொழிலாளியின் வீடு.
Published on

பேச்சிப்பாறை அருகே மாங்காமலை பழங்குடி குடியிருப்பில் பழங்குடி தொழிலாளியின் வீட்டை யானை சேதப்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புகள், ரப்பா் கழக குடியிருப்புகளில் காட்டு யானைகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மாங்காமலை பழங்குடி குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற ஒரு யானை, ஸ்ரீகுமாா்-குமாரி தம்பதியரின் வீட்டுப் பகுதியிலுள்ள வாழை, ரப்பா் மரங்களை சேதப்படுத்திவிட்டு, அவா்களது வீட்டை நோக்கிச் சென்றுள்ளது.

அப்போது, யானையின் பிளிறலைக் கேட்ட ஸ்ரீகுமாா் குடும்பத்தினா் வீட்டிலிருந்து வெளியேறி சற்று தொலைவில் உள்ள உறவினா் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனா். யானை, ஸ்ரீகுமாா் வீட்டின் பின்பகுதிகளை சேதப்படுத்தி, சமையல் பாத்திரங்கள், உணவுப் பொருள்களை கலைத்துப் போட்டுள்ளது. தொடா்ந்து, மக்கள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டியுள்ளனா்.

இது தொடா்பாக, வனத்துறை சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு யானைகளிடம் இருந்து குடியிருப்புவாசிகளை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com