திற்பரப்பு அருகே கோதையாற்றில் காணப்பட்ட முதலை
திற்பரப்பு அருகே கோதையாற்றில் காணப்பட்ட முதலை

திற்பரப்பு அருகே கோதையாற்றில் முதலை நடமாட்டம்: மக்கள் அச்சம்

திற்பரப்பு அருகே கோதையாற்றில் மீண்டும் முதலை காணப்பட்ட நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சம்
Published on

திற்பரப்பு அருகே கோதையாற்றில் மீண்டும் முதலை காணப்பட்ட நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திற்பரப்பு அருகே கோதையாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அடிக்கடி கூறி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை அந்தப் பகுதியிலுள்ள உறை கிணற்றின் மீது முதலையை பாா்த்தனா். இதையடுத்து ஆற்றில் குளிக்கச் செல்பவா்கள், துணிகளை சலவை செய்ய செல்வோா் அச்சமடைந்துள்ளனா்.

திற்பரப்பு அருவியில் படகு சவாரி நடைபெறும் தடுப்பணை பகுதிக்கு அருகில் முதலை காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் ஆற்றில் இருக்கும் முதலையை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை முன்வர வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் அன்பு கூறியதாவது: கோதையாறு பகுதியில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்துள்ள தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது. வனத்துறை, தீயணைப்புத் துறை இணைந்து அப்பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு நடத்துகிறது. முதலை இருப்பதாக உறுதி செய்யப்பட்டால் தலைமை வனப்பாதுகாப்பாளரின் அறிவுரையைப் பெற்று அதை பிடித்து அதற்குரிய இடத்தில் விடப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com