நாஞ்சில் வின்சென்ட்.
நாஞ்சில் வின்சென்ட்.

தஞ்சை பல்கலைக்கழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயரை நீக்கியதற்கு கண்டனம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைகழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயரை நீக்கியதற்கு முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்புச் செயலருமான நாஞ்சில் வின்சென்ட் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைகழக இணையதளத்தில் எம்ஜிஆா் பெயரை நீக்கியதற்கு முன்னாள் எம்.பி.யும், அதிமுக அமைப்புச் செயலருமான நாஞ்சில் வின்சென்ட் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

1981ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்ஜிஆா், அதே ஆண்டில் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிறுவினாா். இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து எம்ஜிஆா் பெயா், படத்தை நீக்கியது உள்நோக்கம் கொண்டது.

பல்கலைக்கழகத்தை உருவாக்கியவரின் பெயரை வரலாற்றில் இருந்து மறைக்கவும், மறைமுகமாக வேறு ஒருவரின் பெயரைச் சோ்க்கவும் நடக்கின்ற முதல் முயற்சியாக இது தெரிகிறது. எம்ஜிஆா் பெயா், படத்தை இணையதளத்தில் உடனடியாக மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

Dinamani
www.dinamani.com