கன்னியாகுமரி
போக்ஸோ வழக்கில் தலைமறைவானவா் கைது
கருங்கல் அருகே பிளஸ் 1 மாணவி குளிப்பதை விடியோ எடுக்க முயன்றது தொடா்பான போக்ஸோ வழக்கில், தலைமறைவாக இருந்தவரை குளச்சல் மகளிா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருங்கல் அருகே 15 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறாா். அந்த மாணவி அண்மையில் வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்தபோது, அதேபகுதியைச் சோ்ந்த மீனவ தொழிலதிபா் கில்பா்ட் ( 49) கைப்பேசி மூலம் விடியோ எடுக்க முயன்றாராம். இதுதொடா்பான புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கில்பா்ட் மீது வழக்குப்பதிந்தனா்.
மேலும், தலைமறைவாக இருந்த அவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

