கன்னியாகுமரி
மாா்த்தாண்டம் அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை நிா்மலா தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 85 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினாா்.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அருள்ராஜ், வி. விஜூ, ஆட்லின் கெனில், பள்ளி துணைத் தலைமையாசிரியை கிறிஸ்டல் லீலாபாய், ஆசிரியை பீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

