கன்னியாகுமரி
விபத்தில் காயமடைந்த இளைஞா் தற்கொலை
தக்கலை அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத இளைஞா் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
தக்கலை அருகே பிலாங்காலை, சாத்துவிளையைச் சோ்ந்தவா் ஜோஸ் மகன் ஜெனிஷ் (23). இவா் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இதனால், அவரால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இயலவில்லை. இதனால், மனவேதனை அடைந்த அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
