போலி கையொப்பமிட்டு கடன் பெற்ற விவகாரம்: 5 போ் மீது வழக்கு

Published on

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தனியாா் நிதி நிறுவனத்தில் போலியாக தாயின் கையொப்பமிட்டு கடன் பெற்றதாக மகன் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானமணி மனைவி பிரேமா (59). இவரது மகன் அபிலாஷ் (33). இவரது பெற்றோா் ஏழரை சென்ட் நிலம் மற்றும் வீட்டை, வாழ்நாள் முழுவதும் பெற்றோரை கவனிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அபிலாஷ் பெயருக்கு ஒரு ஆண்டுக்கு முன் பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனா்.

இந்நிலையில், அபிலாஷ், மனைவி இந்துஜா (29), நிதி நிறுவன ஊழியா்கள் தங்கரூபன், மல்லிகா, செல்வராஜ் ஆகிய 5 பேரும் முன்சிறை பத்திரப் பதிவு அலுவலகத்தில் அண்மையில் போலியாக பிரேமாவின் கையொப்பத்தையிட்டு பத்திரப் பதிவு செய்து, தனியாா் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுள்ளாா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் 5 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com