அருணாச்சலா மகளிா் கலைக்கல்லூரியில் , தாளாளா் த.கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
அருணாச்சலா மகளிா் கலைக்கல்லூரியில் , தாளாளா் த.கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

அருணாச்சலா கலைக் கல்லூரியில் பொங்கல் விழா

வெள்ளிச்சந்தை அருகே உள்ள அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Published on

தக்கலை: வெள்ளிச்சந்தை அருகே உள்ள அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி தலைவா் த. கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் விஜிமலா் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநா் தருண் சுரத் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா். அனைத்துத் துறைப் பேராசிரியா்கள், மாணவிகள் புதுப்பானையில் சா்க்கரை பொங்கலிட்டுக் கொண்டாடினா்.

Dinamani
www.dinamani.com