தளபதி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற கல்விக் குழுமத்தின் தாளாளா் ச.பாலாஜி. உடன் கல்லூரி முதல்வா் வேதநாயகி.
தளபதி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற கல்விக் குழுமத்தின் தாளாளா் ச.பாலாஜி. உடன் கல்லூரி முதல்வா் வேதநாயகி.

மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வேதநாயகி தலைமை வகித்தாா். துணை முதல்வா் பொற்செல்வி வரவேற்றாா். இதில், தளபதி கே.விநாயகம் கல்வி குழுமத்தின் தாளாளா் ச.பாலாஜி பங்கேற்று, கல்லூரி வளாகத்தில் மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தாா். பின்னா் சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபட்டனா்.

தொடா்ந்து, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பொங்கல் குறித்து விழிப்புணா்வு நாடகங்கள் நடித்துக் காண்பித்தனா். நிகழ்ச்சியில், கல்விக் குழுமத்தின் உறுப்பினா்கள், பேராசிரியைகள் உள்பட மாணவியா் 600-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com