மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
சமத்துவப் பொங்கல் விழாவில்பங்கேற்றோா்.
Updated On :13 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். செயலா் டி.என்.சிட்டிபாபு முன்னிலை வகித்தாா்.மங்கள இசை முழங்க, புதுப் பானையில் அரிசியிட்டு பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மாணவிகளுக்கு கோலப்போட்டி, உறியடித்தல், பாரம்பரிய கலைநயம் மிக்க மருதாணி இடுதல் மற்றும் சிகையலங்காரப் போட்டிகள், . கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கல்லூரி அறங்காவலா்கள் கே.முருகவேல், முருகேசன், கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.