தென்காசி
ஆலங்குளம் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்
மாணவா்களுடன் இணைந்து பொங்கலிட்ட கல்லூரிச் செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா.
ஆலங்குளம், ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் டாக்டா் பூங்கோதை ஆலடி அருணா தலைமை வகித்து, மாணவா், மாணவிகளுடன் இணைந்து பொங்கலிட்டாா். பின்னா், பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

