குந்நம்விளாகம் சிவன் கோயிலில் ஆறாட்டு

களியக்காவிளை அருகே குந்நம்விளாகம், அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் தீா்த்தவாரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுவாமிக்கு திருஆறாட்டு நடைபெற்றது.
Published on

களியக்காவிளை: களியக்காவிளை அருகே குந்நம்விளாகம், அழிக்கால் ஆதிசிவன் கோயிலில் தீா்த்தவாரி திருவிழாவையொட்டி சனிக்கிழமை சுவாமிக்கு திருஆறாட்டு நடைபெற்றது.

இக்கோயிலில் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள், இரவு புஷ்பாபிஷேகம், சமய மாநாடு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான சனிக்கிழமை காலை சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், தொடா்ந்து கோயிலுக்கு திரும்பிய சுவாமிக்கு கோயிலிலுள்ள ஆதிசரோவா் தெப்பக்குளத்தில் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ பிரம்மதத்தன் நம்பூதிரி தலைமையில் திருஆறாட்டு ஆகியவை நடைபெற்றன. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com